இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் பாடல்..! புதிரை அவிழ்க்கும் கவிஞர்..?!

இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் பாடல்..! புதிரை அவிழ்க்கும் கவிஞர்..?!

வரலாறுகளின் தொடக்கம் எப்போதுமே சிறு புள்ளியிலிருந்துதான் ஆரம்பித்திருக்கும். ஆனால் தமிழ் திரையிசையின் வரலாறாக இருக்கும் இளையராஜாவின் தொடக்கம் இன்னொரு வரலாறான கண்ணதாசனிலிருந்து தொடங்கியிருக்கிறது! ஆயிரம் படங்களைத் தாண்டி இசையமைத்து விட்ட இளையராஜாவின் இசையில் வந்த முதல் பாடல் எதுவாக இருக்கும் என்ற கேள்வியும், அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நம் எல்லோருக்குமே இருக்கும்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் பாடல்..! புதிரை அவிழ்க்கும் கவிஞர்..?!

கவிஞர் முத்துலிங்கம் இது பற்றி கூறும் போது “நான் எழுதிய பாடல்தான் ராஜா சினிமாவுக்காக இசையமைத்த முதல் பாடல். ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படத்தை பி.மாதவன் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வசனகர்த்தா பாலமுருகன் சிபாரிசு பண்ணியதால் அந்த படத்தில் நான் பாட்டெழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்க்கு ராஜா உதவியாக இருந்தார். ஒரு பாடலுக்கு வித்தியாசன டியூன் வேண்டுமென முயற்சித்த போது எதுவும் சரியாக வரவில்லை. அப்போது அங்கிருந்த ராஜா, ஒரு டியூனை போட்டுக்கொடுத்திருக்கிறார். அது எல்லோருக்கும் பிடித்துப்போயிருக்கிறது.. 

இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் பாடல்..! புதிரை அவிழ்க்கும் கவிஞர்..?!

அந்த டியூனுக்கு என்னிடம் பாட்டெழுதச் சொன்னார்கள். அப்போது நான் எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு சிறிய வீட்டில் இருந்தேன். அந்த வீட்டிற்கு ராஜாவும் கங்கை அமரனும் ஆர்மோனியப் பெட்டியோடு வந்து அந்த டியூனை வாசித்துக்காட்டினார்கள்.  அது வித்தியாசமான டியூன். சரணம் பல்லவி இரண்டுமே வேறு வேறு  ராகத்தில் வரும். மூன்று பெண்கள் தங்களை தாங்களே காவிரி,வைகை, பொன்னி நதிகளாக பாவித்து பாடும் பாடலது,

‘தஞ்சாவூரு சீமையில் கண்ணு 
தாவிவந்த பொன்னியம்மா
பஞ்சம்தீர பூமியெங்கும் நான்
தாவிவந்த தண்ணியம்மா..’

என்ற அந்தபாட்டுதான் ராஜா சினிமாவில் இசையமைத்த முதல் பாடல். அதை எழுதிய பெருமை என்னையே சேரும்” என்கிறார்.

 

இதே படத்தில் இன்னொரு  வித்தியாசமான டியூன் வேண்டும் என்று தயாரிப்பாளர் பி.மாதவன் கேட்கிறார். அவருக்கு  இளையராஜா மீது எப்போதும் பாசம் உண்டு.  ராஜா அன்னக்கிளி படத்தின் முதல் பாடல் பதிவு செய்யும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டது எல்லோருக்கும்  தெரிந்த ஒன்று.. அந்த நேரத்தில் வாத்தியக்குழுவில் இருந்த ஒரு இசைக் கலைஞர்  “நல்ல சகுணம்ம்பா” என்று சொன்னதும் ராஜா மனவேதனையுடன் வாய்ஸ் ரூமில் போய் அமர்ந்திருக்கிறார்.. அரைமணிநேரமாக மின்சாரமும் வரவில்லை, அந்த இக்கட்டான நேரத்தில் அங்கு வந்த பி.மாதவன் திருவேற்காடு கோவிலுக்குச் சென்று வந்ததாகக்கூறி  குங்குமத்தைக் கொடுத்திருக்கிறார். இது ராஜாவுக்கு பெரிய மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. அம்மனின் ஆசியாகவே அதை எடுத்துக்கொண்டார். மீண்டும் மின்சாரம் வரவே பாடல் பதிவு தொடங்கியிருக்கிறது. 

இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் பாடல்..! புதிரை அவிழ்க்கும் கவிஞர்..?!

“வித்தியாசமான டியூன் என்றால் தெலுங்கில் ஒரு டியூன் போட்டோமே அதை பயன்படுத்திக்கொள்ளலாமே அண்ணா”  என்று இசையமைப்பாளர் ஜி.கே.வியிடம் ராஜா சொல்ல, அவரும் அந்த டியூனை தேர்வு செய்திருக்கிறார். அதை மாதவன்  வாசித்துக்காட்ட தயாரிப்பாளருக்கு பிடித்துப்போனது.  ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அது என்ன மாதிரியான சிக்கல் என்பது பற்றி இளையராஜா கூறும் போது “இது ஒரு சிக்கலான டியூன். 

ஒரு பாடலுக்கான டியூன் என்பது ஒவ்வொரு வரியாக முடியும்படி அமைந்திருக்கும். . ஆனால் இந்தப் பாடலின் பல்லவி எங்குமே முடியாமல் போய்க்கொண்டே இருக்கும். அதற்குத் தகுந்தபடி வரிகளை எழுதவேண்டும்.. ஏற்கனவே கன்னடத்தில் இந்த படம் வெளியானபோது, இந்த மெட்டுக்கு  பாட்டெழுத ஐந்து கவிஞர்களுக்கு மேல் முயன்று பார்த்தார்கள். ஆனால் யாருக்கும் சரியாக வரிகள் வந்து உட்காரவில்லை. மூன்று வாரங்களுக்குப்பிறகு ஒரு வழியாக பாடல் சரியாக அமைந்தது. இப்போது அதே டியூன் தமிழில் வரும் போது என்ன நடக்குமென்று  தெரிந்து கொள்ள எனக்கு ஆசை. கவிஞர்தான் பாடல் எழுத வந்திருக்கிறார். 

இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் பாடல்..! புதிரை அவிழ்க்கும் கவிஞர்..?!

இத்தனை கவிஞர்கள் முயன்று கஷ்டப்பட்ட இந்த டியூனுக்கு கவிஞர் என்ன எழுதப்போகிறார் என்று ஆர்வமாக இருந்தேன். சென்னை ப்ரீஜ் ஹோட்டலில்தான் ரூம் போட்டிருந்தார்கள். கவிஞருக்காக எல்லோரும் காத்திருக்க இயக்குநர்கள் தேவராஜ்- மோகன்  இருவரும் சூழலைச்சொல்ல தயாராய் இருக்கிறார்கள். கவிஞர் வந்தவுடன் இயக்குநர்கள்  பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார். இது அங்கிருந்தவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. அங்கே பத்து பேருக்கும் மேல் இருந்திருக்கிறார்கள் இவர்கள் யார் முகத்தையும் கவிஞர் பார்க்காமல்  “ராஜா டியூனை வாசி கேட்போம்” என்றார் வாசித்துக் காட்டினேன். 

கதையின் சூழல் இதுதான். ஹீரோ ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தங்கியிருக்கிறார். மழை வருகிறது. ஹீரோயின் மொட்டைமாடியில் காயும் துணியை எடுக்க வருகிறார்.  அந்த நேரத்தில் மின்னல்  அடிக்கிறது. ஹீரோயின் பயந்து போய் ஹீரோவை கட்டிப்பிடிக்கிறாள். அந்த இடத்தில் பாடல் தொடங்குகிறது.. நான் வாசித்தவுடனே வரிகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? அந்த வரிகள்  டியூனுக்கு பொருத்தமாக இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்குள்ளாகவே அடுத்த வரிகளைச் சொல்கிறார்.  இப்படி அந்தப் பாடலை பத்து நிமிடத்தில் எழுதி முடித்து விட்டார் கவிஞர்” என்று வியந்து பேசுகிறார் இளையராஜா

‘தேன் சிந்துதே வானம் 
உனை எனைத் தாலாட்டுதே 
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க…’

என்று பல்லவியை முடிக்கிறார். இந்தப் பாடலில் கவனிக்க வேண்டிய விஷயம் பாடும் போது முகத்தில் எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டத் தேவையில்லை ஆனால் பாடல் காட்சியில் நடிக்கும் ஹீரோ சிவகுமார்  பாடலின் வரிகளை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் . அது  ஒரு சிக்கலான நடிப்பு. நளினமாகவும், காதலோடும் அதே சமயம் ஆண் தன்மையோடும் நடிப்பிருக்கவேண்டும், அப்போதுதான் ரசிகர்களுக்கு இந்தப் பாடலின் உணர்ச்சி மனதில் பதியும். அதை சிவகுமார் பளிச் என்று செய்திருப்பார். சரணத்தில் கவிஞர்  கண்ணதாசனின் கற்பனை இன்னும் ஆழமாக  விரிகிறது.

இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் பாடல்..! புதிரை அவிழ்க்கும் கவிஞர்..?!

‘பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள் 
பனிமேடை போடும் பால் வண்ணமேனி
கொண்டாடுதே சுகம் சுகம் 
பருவங்கள் வாழ்க..’

சந்தர்ப்ப சூழலில் ஏற்பட்ட இந்த ஸ்பரிசம் மழைநேரத்தில் எப்படியெல்லாம் இருக்கும் என்று கவிஞர் தன் மனக்கண்ணால்  பார்த்து விவரிக்கும்போது இயக்குநர் அதை மட்டுமே காட்சிப்படுத்தினால் போதும் என்கிற நிலை. இது படப்பிடிப்புக்கு உதவியாக இருக்கும்.

சுகம் வாழ்க என்று முதல் சரணத்தை முடித்த கவிஞர், இரண்டாவது சரணத்தில்  நாயகி என்ன பாடுவாள் என்பதை தன் பாணியில் எழுதுகிறார்.

‘வைதேகி முன்னே ரகுவம்ச ராமன் 
விளையாட வந்தால் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் 
சொந்தங்கள் வாழ்க…’

கவிதையின் ஊடே காதலி எண்ணத்தை வெளிப்படையாக வைத்துவிட்டார் கவிஞர்.

‘கண்ணோடு கண்கள் 
கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம் 
காலங்கள் வாழ்க…’

[video:https://youtu.be/GpqykUJQb9g]

இப்படியெல்லாம் கவிஞர் கற்பனை செய்வது காட்சியாக்கப்பட்ட பின்பு, பாடல் முடியும்போது ஒரு சஸ்பென்ஸை வைத்திருப்பார்கள் இயக்குநர்கள் தேவராஜ் -மோகன். 

கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதுவதை இளையராஜா முதன் முதலில் நேரில் பார்த்தது இந்த பாடல் கம்போசிங்கில்தான்.  ஆனால் இதற்கு முன்பே இயற்கையே கண்ணதாசன் பாடலுக்கு இளையராஜாவை இசையமைக்க வைத்தது. 

தன் அண்ணன் பாவலரோடு பிரச்சாரப் பாடல்களை பாட ஒரு ஊரில் முகாமிட்டிருந்த நேரத்தில், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு மறைந்துவிட்ட செய்தி வந்து சேர்கிறது. இதனால் கச்சேரியை வேறொரு நாளுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்படுகிறது. நீண்ட  ஆலோசனைக்குப்பிறகு ஒரு யோசனை செய்யப்படுகிறது. அன்றைய தினத்தந்தியில்  நேருவிற்காக கண்ணதாசன் எழுதிய அஞ்சலி கவிதை ஒன்று வெளியாகியிருந்தது. ‘சீரிய நெற்றி எங்கே சிவந்த நல்லிதழ்கள் எங்கே..’ என்ற அந்தக் கவிதையை நிகழ்ச்சிக்கு முன்பு பாடுவதென்று முடிவானது, இந்த கவிதைக்கு  இசையமைத்தது இளையராஜா. ஒரு வரலாறு இன்னொரு வரலாற்றை மறைமுகமாக ஆசீர்வதித்தது இப்படித்தான்.

Share this story