ஒரிஜினல் ஷூ வந்தால்தான் நடிப்பேன்..! ஒத்தக்காலில் நின்று சாதித்த நடிகர்.!?

ஒரிஜினல் ஷூ வந்தால்தான் நடிப்பேன்..! ஒத்தக்காலில் நின்று சாதித்த நடிகர்.!?

சினிமாவில் வளர்ந்த நடிகர்கள் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்கள் பண்ணும் அழிச்சாட்டியங்களுக்கு பஞ்சமே இருக்காது.! எல்லா நடிகர்களுமே இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். பெரிய ஹீரோக்கள் கதையும்,சம்பளமும் ஓக்கேன்னா ஒரு பிரச்சினையும் பண்ண மாட்டார்கள்.ஒன்றிரண்டு அடாவடி பார்ட்டிகள் இருப்பதையும் நாம ஒப்புக்கொண்டுதான் ஆகணும்.அவர்கள் யாரென்பதும் உங்களுக்கே தெரிந்தும் இருக்கலாம்.இந்த எபிசோட்டில் வர்றவர் காமெடி நடிகர்.

ஒரிஜினல் ஷூ வந்தால்தான் நடிப்பேன்..! ஒத்தக்காலில் நின்று சாதித்த நடிகர்.!?

சூப்பர் ஸ்டாருக்கு செல்லப்பிள்ளையான இயக்குனர் அவர்.குட்டி சூப்பர் ஸ்டாரை வைத்து, அறுபடை வீடுகொண்ட கடவுளின் பெயரில் ஒரு படத்தை எடுத்தார்.அப்பல்லாம் ஹீரோ ரொம்ப சாது.கரெக்ட் டைமுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருவார்.நல்லபிள்ளையா நடிச்சுக் கொடுத்திட்டு போயிருவார்.பொதுவா இந்த ஹீரோதான் பிரச்சினை பண்ணுவார்ன்னு பயப்படும் மொத்த இண்டஸ்ட்ரியும்! ஆனால், அந்தப்படத்தில் நடிக்க வந்த காமெடி நடிகரால் முதல் நாளே இரண்டு மணிநேரமா படப்பிடிப்பு நடக்கவில்லை! 

என்ன காரணம் தெரியுமா..? அன்னைக்கு படப்பிடிப்பு ஏவி.எம் ஸ்டுடியோவில் ஆரம்பிச்சிருக்கு.எப்பவும் சினிமாவில் முதல் நாள் ஷூட்டிங் என்றால் எல்லோரும் அசெம்பலாகி பூஜை போட்டு ஃபர்ஸ்ட் ஷாட் வைக்கிறதுக்கு கொஞ்சம் முன்னப் பின்ன டைம் ஆகிடும்.இந்த இயக்குனர் படங்களில் அதெல்லாம் வேலைக்கு ஆகாது.எல்லாமே கரெக்ட் டைமுக்கு நடக்கணும்.தொழில்நுட்ப கலைஞர்கள்,நடிகர்கள் எல்லோருக்கும் அவரோட மைண்ட் செட் தெரியும் என்பதால்,அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் மொத்தப்பேறும் வந்திட்டாங்க.பூஜையும் ஆரம்பிச்சு ஒரு ஷாட் எடுத்திட்டு பிரேக் விட்டிருக்கிறார்.

ஒரிஜினல் ஷூ வந்தால்தான் நடிப்பேன்..! ஒத்தக்காலில் நின்று சாதித்த நடிகர்.!?

பிரேக்கில் ஒரு குரூப் சாப்பிட்டுக்கொண்டிருக்க அடுத்து எடுக்கப்போற காட்சியை ஹீரோவுக்கும், காமெடி நடிகருக்கும் இயக்குனரே விளக்கமாகச் சொல்கிறார்.அதன் பிறகு செட் ஒர்க் நடக்கிற இடத்திற்கு இயக்குனர் போயிட்டார்.காஸ்ட்யூம் கண்டின்யூட்டி பார்க்கிற உதவி இயக்குனரை தனது அறைக்கு வரச்சொன்ன காமெடி நடிகர்,தன் காலில் போட்டிருந்த ஷூவைக் காட்டி…” இதென்ன ஷூ… இதெல்லாம் போட்டால் என் காலுக்கு ஏதாவது ஆகிடும்.நான் நைக் ஷூவைத்தவிர வேற பிராண்ட் போட மாட்டேன். காஸ்ட்யூமர்க்கிட்டச் சொல்லி மாத்தச் சொல்லுங்க.அப்பதான் நான் ஷாட்டுக்கு வருவேன்” என்று அடம்பிடித்திருக்கிறார்.

உதவி இயக்குனருக்கு அறையில் இருந்த ஏஸி குளிரையும் மீறி வேர்க்க ஆரம்பித்திருக்கிறது. டைரக்டர் ஷாட் ரெடின்னு சொன்னால் ஆர்டிஸ்டுகளை ஸ்பாட்டுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியதும் அவரோட வேலைதான். இந்த நேரத்தில் இப்படி அடம்பிடிக்கிறாரே என்று குழப்பம்.

ஒரிஜினல் ஷூ வந்தால்தான் நடிப்பேன்..! ஒத்தக்காலில் நின்று சாதித்த நடிகர்.!?

வேறு வழியில்லாமல் காஸ்ட்யூமரை அழைத்துக்கொண்டு பாண்டி பஜாருக்கு போயிருக்கிறார் அந்த உதவி இயக்குனர்.10 மணிக்கு மேலதான் கடை திறப்பார்கள் என்பதால் பதட்டத்தோடு கடை ஓனருக்கு போனைப் போட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் காஸ்ட்யூமர்.ரெகுலராக வாங்குகிற இடம் என்பதால் ஓனரும் உடனடியாக வந்து ‘நைக்’ பிராண்டட் ஷூவை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.நன்றி சொல்லிவிட்டு பறந்து வந்திருக்கிறார்கள் ஸ்பாட்டுக்கு. அதற்குள் இயக்குனருக்கு விஷயம் தெரிந்து சம்பந்தப்பட்ட உதவி இயக்குனரை வலைவீசி தேடியிருக்கிறார்.அவர்தான் பாண்டிபஜார் போயிட்டாரே! 

சத்தம் காட்டாமல் காமெடி நடிகரிடம் போய் ஷூவைக் கொடுத்ததும்,போட்டுப்பார்த்துவிட்டு இதுதான் கரெட்டாவும் சாஃடாவும் இருக்கு.இதை முதல்லயே கொடுத்திருக்கலாமே ண்ணே என்று உதவி இயக்குனரையும்,காஸ்ட்யூமரையும் மையமாக பார்த்து சொல்லிவிட்டு ஸ்பாட்டுக்கு போயிருக்கிறார்.அதுவரை வேற ஷாட் எதுவும் வைக்காமல் காத்திருந்த இயக்குனர் அன்று முழுவது ஃபுல் வைட் ஷாட் எதுவும் வைக்கவில்லை.! காரணம் என்னவென்று எல்லோருக்கும் தெரிந்தாலும் சொல்ல முடியுமா.?!

ஒரிஜினல் ஷூ வந்தால்தான் நடிப்பேன்..! ஒத்தக்காலில் நின்று சாதித்த நடிகர்.!?

அன்றைய தினம் ஷூட்டிங் பேக்கப் ஆகிப் போகும்போது உதவி இயக்குனரிடம் காஸ்ட்யூமர் சொன்ன தகவல் இப்போதுவரை அந்த காமெடி நடிகருக்குத் தெரியாது என்பதுதான் ஹைலைட்! 

ஏற்கனவே கொடுத்த ஷூ 2000 ரூபாயும்.மாத்தி கொடுத்தது ஒரிஜினல் மாதிரியே இருக்கிற டூப்ளிகெட் ‘நைக்’ -வெறும் 600 ரூபாய்! கருத்தா பேசுற காமெடி நடிகர் இப்படி கோட்டை விட்டது குறித்து படம் முடியும்வரை உதவி இயக்குனர் வட்டாரத்தில் மட்டும் பேச்சாக இருந்திருக்கிறது!

Share this story