டிஜிட்டலில் வெளியானது நடிகர் நெப்போலியனின் முதல் ஹாலிவுட் படமான ’டெவில்ஸ் நைட்’….

டிஜிட்டலில் வெளியானது நடிகர் நெப்போலியனின் முதல் ஹாலிவுட் படமான ’டெவில்ஸ் நைட்’….

புது நாத்து புது நெல்லு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நெப்போலியன். தொடர்ந்து சின்னத்தாயி, ஊர் மரியாதை, இது நம்ம பூமி, சீவலேரி பாண்டி, கிழக்குச் சீமையிலே, எதிரும் புதிரும், கரிசக்காட்டு பூவே, மிட்டா மிராசு, வீட்டோட மாப்பிள்ளை, போக்கிரி என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, சமூகநீதி இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.

டிஜிட்டலில் வெளியானது நடிகர் நெப்போலியனின் முதல் ஹாலிவுட் படமான ’டெவில்ஸ் நைட்’….

27 வயதில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கலக்கி வந்த நெப்போலியன், டெவில்ஸ் நைட், கிறிஸ்துமஸ் கூப்பன் ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  ரஜினிகாந்துக்குப் பிறகு நேரடி ஆங்கிலப் படத்தில் நடித்த தமிழன் நான் தான் என்று பெருமையும் இவரைச் சேரும். இந்நிலையில் தற்போது இவரது முதல் ஹாலிவுட் படமான டெவில்ஸ்  நைட், இன்று டிஜிட்டலில் ரிலீஸாகிறது.

டிஜிட்டலில் வெளியானது நடிகர் நெப்போலியனின் முதல் ஹாலிவுட் படமான ’டெவில்ஸ் நைட்’….

 

டெல் கணேசன் தயாரிப்பில், லோகன் காலெகி இயக்கியிருக்கும் இந்தப்படம் இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியாகிறது. இதனை அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட  ஓடிடி தளங்களில் பார்க்கலாம். விரைவில் உலகெங்கும்  வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.  ஹாரர், திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார் நெப்போலியன். 

டிஜிட்டலில் வெளியானது நடிகர் நெப்போலியனின் முதல் ஹாலிவுட் படமான ’டெவில்ஸ் நைட்’….

Share this story