தி பேங்க்கர்.விமர்சனம்.

தி பேங்க்கர்.விமர்சனம்.

ஜியார்ஜ் நோல்பி இயக்கி இருக்கும் படம். ஆண்டெனி மெக்சி,சாமுவெல் ஜாக்சன்,நிக்கோலஸ் ஹோல்ட் நடித்திருல்கும் படம்.கதை ஒரு அசாதாரண தாளத்தில் இயங்குகிறது, ஆனால்,படத்தில் வரும் சம்பவங்கள் அத்தனை சீரியசாகப் போய்விடாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.கதை நடப்பது 1954ம் வருடத்து அமெரில்காவில்.ஆண்டனி மெக்சியும்,சாமுவெல் ஜாக்சனும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வங்கியைத் துவங்க விரும்புகிறார்கள். 

தி பேங்க்கர்.விமர்சனம்.

ஆனால் அவர்கள் இருவரும் கருப்பர்கள்.காசிருந்தாலும் கருப்பர்கள் பேங்க் உரிமையாளர் ஆக  முடியாது.அவர்களுக்கு விதிக்கப்பட்டது,தோட்டக்காரன்,சமையல்காரன், டிரைவர் இவளவுதான்.அதனால் சாமுவெல் ஜாக்சனும்,ஆண்டெனியும் ஒரு வெள்ளையரை தங்கள் முதலாளியாக வேலைக்கு அமர்த்துகிறார்கள்.அதுதான் நிக்கோலஸ் ஹோல்ட்.அவர் தான் வங்கியின் சேர்மென்.சாமுவெல் ஜாக்சன் சேர்மெனின் டிரைவர்,ஆண்டெனி மெக்கி வீட்டின் ஜானிட்டர்.இவளவுதான் கதை.

தி பேங்க்கர்.விமர்சனம்.

இதை வைத்துக்கொண்டு அன்றைய அமெரிக்காவின் நிறவெறி அராஜகத்தை கடுமையாக விமர்சித்து இருக்கலாம்,ஆனால் படத்தின் இயக்குனர் ஜியோர்ஜ் நோல்பி இந்தக் கொடுமைகளை சின்ன எள்ளலுடன் சொல்கிறார். ஆனாலும்,கொரோனா போன பிறகு படம் இன்னொரு ரவுண்ட் வருவதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது.

Share this story