"படத்தின் முதல் காட்சியே நம்மை அசத்துகிறது"- அசுரகுரு விமர்சனம்

"படத்தின் முதல் காட்சியே நம்மை அசத்துகிறது"- அசுரகுரு விமர்சனம்

படத்தின் முதல் காட்சியில் நம்மை அசத்தி விடுகிறார் இயக்குநர் ராஜ் தீப். இருளில், ஓடும் ரயிலில் விக்ரம் பிரபு செய்யும் அந்த முதல் கொள்ளைச் சம்பவத்தில் டைமிங்,புத்திசாலித்தனம், துணிச்சல் எல்லாம் சிறப்பாக வெளிப்படுகின்றன.அடா,சூப்பர் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்தான் தெரிகிறது மொத்தப் படத்திலும் அந்த ஒரே ஒரு காட்சிதான் உருப்படியான காட்சி என்று.போலீஸ்கார நண்பன் துப்புக்கொடுக்க கிரிமினல்கள், அரசாங்கத்தை ஏமாற்றும் வணிகர்களிடம் விக்ரம் பிரபு கொள்ளையடிக்கிறார், அடிக்கிறார், அடித்துக்கொண்டே இருக்கிறார். 

"படத்தின் முதல் காட்சியே நம்மை அசத்துகிறது"- அசுரகுரு விமர்சனம்

இவரைப் பிடிக்க போலீஸ் ஒரு போலீஸ் அதிகாரியை (சுப்புராஜ் ) நியமிக்கிறது.விக்கிரமிடம் பணத்தைப் பறிகொடுத்தவர்களில் ஒருவர் பிரைவேட் டிடக்டிவ் மகிமா நம்பியாரை அனுப்புகிறார். அவரும் பிளாக் சிகரட் பிடித்தபடி மோட்டார் சைக்கிளில் சுற்றி விக்கிரமை சந்தித்தால் இருவருக்கும் காதல் வந்துவிடுகிறது.இதெல்லாம் போதாதென டைரக்டர் ராஜ் தீப் ஒவ்வொரு கொள்ளைக்கு முன்பும் விக்கிரமின் ஃபிளாஷ்பேக்கை குட்டி குட்டி காட்சிகளாக சொல்கிறார். அதோடு விக்கிரம் பிரபுவுக்கு திடீர் திடீரென தலைவலி வருகிறது. அவருக்கு மனப்பிறழ்வு இருக்கிறது என்கிறார்.

"படத்தின் முதல் காட்சியே நம்மை அசத்துகிறது"- அசுரகுரு விமர்சனம்

மகிமா, சுப்புராஜ் இருவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள். ஹீரோவும் டைரக்டரும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.போலீஸ் தன்னைத் தேடுவதை அறிந்த பிறகும் , எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லாமல் திருடுகிறார் நாயகன்.உதாரணமாக அந்த பூக்கடையில் திருடியதும் எஸ்கேப் ஆவதைப் பார்க்காமல் கண்ணில் படுகிறவனை எல்லாம் அடித்துக்கொண்டு இருக்கிறார் விக்கிரம் பிரபு.முதலில் சொன்னபடியே அந்த ஒரு காட்சியைத்தவிர உருப்படியாக ஒன்றுமில்லை.இப்போதெல்லாம் படங்களில் யோகிபாபு வருவது ஒரு சடங்குபோல ஆகிவிட்டது. இதிலும் வருகிறார், பிரதமர் மோடி,ஜி.பி.எஸ்,ஆதார் கார்டு என்று சில மொக்கை டயலாக்குகளோடு கிளம்பிவிடுகிறார்.ஆமாம்,அசுரகுரு என்று சுக்கிராச்சாரியார் பேரையெல்லாம் படத்துக்கு வைத்து மக்களை வதைத்தால் தெய்வகுற்றம் ஆகிவிடாதா?.

Share this story