ஊரடங்கில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நடிகை..

ஊரடங்கில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நடிகை..

கொரோனா வைரஸால்  உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  வைரஸ் பாதிப்பு குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில், நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறமிருக்க கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தையும் பறித்திருக்கிறது, பலர் வேலை இழந்து வருமானம் இழந்து உணவுக்கு வழியில்லாமல் நிற்கிறார்கள். இதில் தினக்கூலி பாணியாளர்களின் நிலை இன்னும் மோசம்.. அதனால் பலரும் மாற்றுத் தொழிலை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
ஊரடங்கில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நடிகை..
அந்தவகையில் கேரளா மாநிலம் வள்ளிக்கோட் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. 36வயதாகும் இவர்  கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். ஊரடங்கால் கடந்த பல மாதமாக நாடகங்கள் நடக்கவில்லை.. இதனால் வருமானம் இழந்து குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கும் மஞ்சு, ஆட்டோ ஓட்டும் தொழிலில் இறங்கிவிட்டார்.
ஊரடங்கில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நடிகை..
நாடகத்தில் நடித்துவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்புவதற்காகக் கேரள மக்களின் கலைக் கழகத்திடம் கடன் பெற்று வாங்கி வைத்திருந்த ஆட்டோ, தற்போது அவருக்கு உதவியிருக்கிறது.  அவரே காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ டிரைவராக மாறி பிழைப்பு நடத்தும் மஞ்சு சக தொழிலாளர்களுக்கும் உதவி வருகிரார்.

Share this story