ஆஸ்திரேலிய சிறுவன் குவேடன் பெய்லி மலையாளப்படத்தில் நடிக்கிறான்!

 03/23/2020 - 11:45
quaden-and-guinness-pakru

போனமாதம் உலகெங்கும் பேசப்பட்டான் அந்த உடல் வளர்ச்சி குறைந்த சிறுவன். தனது குள்ளமான உருவம் கேலி செய்யப்படுவதால் சாகப் போகிறேன் என்று அவன் சொன்னதை அவன் தாய் வலைத்தளத்தில் பகிர உலகமே திரண்டு அவன் பக்கம் நின்றது நினைவிருக்கிறதா?. அந்த சிறுவன் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு மலையாள நடிகர் கின்னஸ் பக்ருவைப் போல நடிகனாக விருப்பம் என்று சொல்லி இருந்தான்.

ஜீவாவுடன் அமிதாப் என்கிற பெயரில் குழந்தைகளுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகராக வருபவர் தான் பக்ரு. அது குறித்து சிறுவனின் தாய் பக்ருவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்ரு குவேடனுக்கு பதில் சொல்லி இருக்கிறார். நம்மைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக வி.ஆர்.வித் யூ ' இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு மகிழ்ச்சி!,

style="display:block"
data-ad-client="ca-pub-1064892438539206"
data-ad-slot="9276417469"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">

நான் எனது அடுத்த படமான ஜானகி படத்தின் இயக்குநரிடம் பெய்லியைப் பற்றிச் சொன்னபோது அவர் மகிழ்ந்து ஒப்புக்கொண்டதாகவும். கொரோனபீதி ஒரு முடிவுக்கு  வந்ததும் ஜானகி படப்பிடிப்பு துவங்கும்.நாம் சேர்ந்து நடிக்கலாம் என்று சொல்லி இருக்கிறாராம். இந்த வேகம்தான் பக்ருவின் உயரத்தை மேலும் மேலும் கூட்டி இருக்கிறது.