பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடக்கம்…போட்டியார்கள் லிஸ்ட் ரெடி!?

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடக்கம்…போட்டியார்கள் லிஸ்ட் ரெடி!?

கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வாழ்வாதாரத்தைக் காக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள். பல மாதங்களுக்கு மேலாக முடங்கியிருக்கிறது திரைத்துறை. ஆனால் சின்னத்திரையில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.
உலகம் முழுதும் பிரபலமான ஒரு ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸ். இந்தியாவிலிலும் இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஹிந்தியில் 14வது சீசன் வரை போய்க் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. வெளியில் நன்றாக இருந்தாலே பிரச்னைகள் வருவது சுலபம். அதுவும் 15 பேரை 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் போட்டு அடைத்தால் எப்படி இருக்கும். செல்போன் கூட இல்லாமல்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடக்கம்…போட்டியார்கள் லிஸ்ட் ரெடி!?
அந்த நேரத்தில் யார் அதிக சென்சேஷனலாக இருக்கிறார்களோ அவர்களையும் வீட்டிற்குள் வரவைத்து சர்ச்சையை ஏற்படுத்தி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று சீசன்களும் ஜூன் மாதத்தில் தான் ஒளிபரப்பைத் தொடங்கின. ஆனால் இந்தாண்டு கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடக்கம்…போட்டியார்கள் லிஸ்ட் ரெடி!?
தெலுங்கில் பிக்பாஸ் அடுத்த சீசனை ஆரம்பிக்க வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தமிழிலும் வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பமாகும் எனக் தகவல் வெளியாகி உள்ளது. போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறதாம். இந்த முறை சர்ச்சை நாயகிகளான டிக்டாக் புகழ் இலக்கியா மற்றும் ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
லாக்டவுனில் வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு என்டேர்டைன்மெண்ட் ஆன் தி வே !

Share this story