பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் ரெய்னர் காலமானார்…

பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் ரெய்னர் காலமானார்…

எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என ஹாலிவுட் திரையுலகில் பன்முகத் திறமைகளுடன் ஜொலித்து வந்தவர்  நகைச்சுவை நடிகர் கார்ல் ரெய்னர். 98 வயதான இவர், வயது மூப்பு காரணமாக கடந்த திங்கள் கிழமை, கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார். இந்தத் தகவலை அவரது உதவியாளர்  ஜூடி நாகி அறிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் ரெய்னர் காலமானார்…

புகழ்பெற்ற  ’தி டிக் வான் டைக்’ ஷோவை உருவாக்கிய கார்ல் ரெய்னர், இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் ஒன்பது எம்மி விருதுகளை வென்றார். இவர், த ஆர்ட் ஆஃப் லவ், த காமிக், ஜெனரேசன், த ஜெர்க், ஹிஸ்டரி ஆப்த வேர்ல்ட்- பார்ட் 1, த மெஜஸ்டிக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனராக அவரது மிகவும் பிரபலமான படங்களில் ஓ காட்,  , தி ஜெர்க், என்டர் த லாஹிங், த காமிட், வேர் இஸ் போப்பா, த மேன் வித் டூ பிரைன்ஸ் உட்பட சில படங்களை இயக்கியும் உள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு டாய் ஸ்டோரி 4 அனிமேஷன் படத்துக்காக, பின்னணி குரல் கொடுத்திருந்தார். ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ள இவர், கிராமி விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் ரெய்னர் காலமானார்…

கார்ல் ரெய்னர் இயற்கை எய்திய தகவலை அவரது மகனும் இயக்குனருமான ராப் ரெய்னர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ”என் தந்தை காலமாகிவிட்டார். எனக்கு கலங்கரை விளக்கமாக இருந்தவர் அவர். அவரது மறைவால் வேதனையில் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  மூத்த நடிகரான கார்ல் ரீய்னர் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story