‘லூசிஃபர்’ இயக்குநரை உறுதிப்படுத்திய சிரஞ்சீவி

‘லூசிஃபர்’ இயக்குநரை உறுதிப்படுத்திய சிரஞ்சீவி

‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கப்போவது யார் என்பதை சிரஞ்சீவி உறுதிப்படுத்தியுள்ளார்.

ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான சூப்பர் ஹிட் மலையாளப் படம் ‘லூசிஃபர்’. மோகன்லால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தேர்தல் சமயத்தில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர் – ப்ரித்விராஜின் மாஸ்டர்  பிளான் | Lucifer, the prithviraj direction comes to theatre during election  - The Subeditor Tamil

முரளி கோபி எழுதிய இந்தக் கதைக்கு, தீபக் தேவ் இசையமைத்தார். 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்ற இந்தப் படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்றினார். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பதாகக் கூறப்பட்டது. ‘சாஹோ’ படத்தின் இயக்குநரான சுஜீத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், சில மாதங்களிலேயே அவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியானது.

‘லூசிஃபர்’ இயக்குநரை உறுதிப்படுத்திய சிரஞ்சீவி

இந்நிலையில், ‘லூசிஃபர்’ ரீமேக்கை இயக்கப் போவது வி.வி.விநாயக் என சிரஞ்சீவி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு ‘லூசிஃபர்’ ரீமேக்கில் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சுஜீத் தெரிவித்தார் எனவும் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

V. V. Vinayak - Wikipedia

ராம் சரண், என்.வி.பிரசாத் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ ரீமேக்கை முடித்தபிறகு, ‘லூசிஃபர்’ ரீமேக்கில் நடிக்கிறார் சிரஞ்சீவி.

Share this story