ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேல்ராஜின் தந்தை காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்…

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேல்ராஜின் தந்தை காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்…

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் வேல்ராஜ். ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமான இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்று வசூலைக் குவித்தது.
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேல்ராஜின் தந்தை காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்…
அதைத்தொடர்ந்து தனுஷ் – சமந்தா நடித்த தங்கமகன் படத்தையும் இயக்கினார். வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் வேல்ராஜ் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையையும் பதித்தவர்.
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேல்ராஜின் தந்தை காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்…
இந்நிலையில் இவரது தந்தை எஸ்.ராஜாமணி இன்று மதியம் 1.45 மணியளவில் இயற்கை எய்தினார். 99 வயதான அவர் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். நாளை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.  வேல்ராஜின் தந்தை மறைவையொட்டி, திரைத்துறையினர் தங்களது இரங்கலையும்,  ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

Share this story