போதைப்பொருள் விவகாரம்: நடிகைகளுக்கு ஜாமீன் மறுப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி இருவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையைத் தொடர்ந்து அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக புகார்: கைதான நடிகைகளுக்கு நெருக்கடி  முற்றுகிறது || Ragini Dwivedi Sanjana Galrani Complaint illegal  accumulation of property

அதைத் தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது ஐந்துக்கும் மேற்பட்ட முறை விசாரணை நடைபெற்றது. ஆனால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடைசியாக இந்த வழக்கின் மீதான விசாரணை, கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சீனப்பா, விசாரணையை 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையில் இரண்டு நடிகைகளுக்கும் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, அவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

Actresses Ragini-Sanjana's sensational confession to 24 prominent  personalities || விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம் 24 முக்கிய  பிரமுகர்களுக்கு தொடர்பு நடிகைகள் ...

இந்த இரண்டு நடிகைகளும் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி, அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.

கன்னட திரையுலகில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து பூதாகரமாகக் கிளம்பியுள்ள போதைப்பொருள் விவகாரத்தில், நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

போதைப்பொருள் விவகாரம்: நடிகைகளுக்கு ஜாமீன் மறுப்பு

Share this story