விலை மதிப்பில்லா பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா போலீசில் புகார்!

விலை மதிப்பில்லா பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா போலீசில் புகார்!

இளையராஜா தனது பெரும்பாலான படங்களுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் வைத்து தான் இசை பணிகளை மேற்கொண்டார். கடந்த 35 வருடங்களாக  அங்குள்ள ஸ்டுடியோவில் இசையமைத்த இளையராஜாவை சில மாதங்களுக்கு முன்பு ஸ்டூடியோவைக் காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வற்புறுத்தியது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குனர் பாரதிராஜா தலைமையில் டைரக்டர்கள் பலர் பிரசாத் ஸ்டூடியோவை முற்றுகையிட்டனர். அதையடுத்து, இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விலை மதிப்பில்லா பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா போலீசில் புகார்!
பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் தனது ஸ்டூடியோவில் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், விலை மதிப்பற்ற சில பொருள்களையும், கையால் எழுதி வைத்திருந்த மியூசிக் நோட்ஸ்களையும் சேதப்படுத்தியுள்ளதாவும் இளையராஜா புகார் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் திரு. சாய் பிரசாத் மீது சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் இளையராஜா தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகார் பின்வருமாறு:
“நான் 1976 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பல மொழிகளில் 1300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், 7000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்த புகழ்பெற்ற இசை இயக்குனர்.
முதலில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் திரு. எல்.வி.பிரசாத் என்பவருக்கு சொந்தமானது. எனது திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக அவர் எனக்கென்று பிரத்தியேகமாக ஒரு ஸ்டூடியோ வழங்கினார். எந்தவித இடையூறும் இல்லாமல் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு அனுமதி அளித்துள்ளார்.
இசையமைக்க விடாமல் தடுக்கின்றனர் ...
பல உயர் மதிப்புள்ள உபகரணங்கள், இசைக்கருவிகள், கையால் எழுதப்பட்ட இசைக் குறிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதில் நான் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளேன், மேலும் ஒரு காலகட்டத்தில் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஸ்டூடியோ நடத்தி வருகிறேன்.
பின்னர், திரு. ரமேஷ் பிரசாத்தின் மகன் திரு. சாய் பிரசாத், நிறுவனத்தின் பிரசாத் ஸ்டுடியோஸ் / பிரசாத் டிஜிட்டல் ஸ்டூடியோவின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்ட பிறகு, செப்டம்பர் 2019 முதல் வாரத்தில், அவர்கள் சட்டவிரோதமாக எனது மின்சாரம், நீர் மற்றும் பிற வசதிகளை துண்டித்து விடுவதாக அச்சுறுத்தினர். ஸ்டூடியோ வளாகத்தில் , சில உதவியாளர்களுடன் கட்டாயமாக நுழைந்து, எனது அமைதியான மற்றும் பிரத்தியேக உடைமை மற்றும் அமைதியை தொந்தரவு செய்யத் தொடங்கினர்.  அவர்கள் என்னை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர்….”
இசையமைப்பதற்கு இடையூறு செய்வதாக ...
மேலும் வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்தில் ஸ்டூடியோவில் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், விலை மதிப்பற்ற சில பொருள்களையும், கையால் எழுதி வைத்திருந்த மியூசிக் நோட்ஸ்களையும் அகற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதனால் திரு. சாய் பிரசாத் மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இளையராஜா தரப்பிலிருந்து சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முழு புகார் நகல் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்க: https://drive.google.com/file/d/1naMQKtIJmdS8DF8ZOB93pSiDDDj9Egg8/view?usp=sharing

Share this story