பெரும் பொருட் செலவில் போடப்பட்ட செட்… நடிக்க மறுத்த ஹீரோ… டைரக்டர் செய்த சாதுரியமான செயல்.!?

பெரும் பொருட் செலவில் போடப்பட்ட செட்… நடிக்க மறுத்த ஹீரோ… டைரக்டர் செய்த சாதுரியமான செயல்.!?

சினிமாவில் நடிக்க வர்ற நடிகர்களும் சரி,டெக்னீஷியன்களும் சரி தான் எந்த உயரத்தை அடைய வேண்டும்…அல்லது அதை தாண்ட வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியமாக வைத்திருப்பார்கள்..! இதை தப்பென்று ஒரு போதும் சொல்ல முடியாது.!? ஆனால் அதுவாகவே ஃபீல் பண்ணிக்கிட்டு அப்படியே தங்களைக் காட்டிக்கொள்ள இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் பல நேரங்களில் காமெடியாக இருக்கும்.அதைப் பற்றி அவர்கள் ஒரு போதும் கவலைப் படவே மாட்டார்கள்.. உதாரணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி!
இந்தப் பெயரைச் சொன்னதும் உங்களுக்கு பல நடிகர்களின் முகங்களும், அவர்கள் செய்கிற அட்ராசிட்டியும் மனக்கண்ணில் வந்து போயிருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது ;இந்த லிஸ்டில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நடிகர் பற்றிய செய்திதான் இது.
பெரும் பொருட் செலவில் போடப்பட்ட செட்… நடிக்க மறுத்த ஹீரோ… டைரக்டர் செய்த சாதுரியமான செயல்.!?
இந்த சம்பவம் நடந்தது.. ரொம்ப வருடம் ஆனாலும் தகவல் புதிது.தமிழ் சினிமாவில் காமெடியில் சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு இன்று வரை அப்டேட்டாக கலகலப்பாக கதை சொல்லிக்கொண்டிருக்கும் இயக்குனரின் உதவியாளர் அவர்.
இந்த இயக்குனர் இயக்கிய பல படங்களின் காமெடிக்கு உதவியாளரின் பங்களிப்பு அபாரமானது என்று இயக்குனருக்கும் தெரியும்… இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கும் தெரியும்! அப்படிப்பட்ட உதவியாளரின் முதல் படம் அது.
படத்தில், பாடி பில்டிங்கில் இப்போதுவரை கட்டுக்கோப்பாக இருக்கும் நடிகர்தான் ஹீரோ.அந்த நடிகர்தான் இளைய தலைமுறை நடிகர்களுக்கும் இப்போதுவரை’ஹீரோ’ ! இது,அவருக்குத் தெரியுமான்னு தெரியாது!
அந்த ஹீரோ நடிக்கும் படங்களில் ஒர்க் பண்ற அத்தனை பேரையும் அப்படிப் பார்த்துக்குவார்.அது போலவே அவரைச் சுற்றி எப்போதும் பெரிய நட்பு வட்டம் இருக்கும்.அவர்களுக்கும் ‘புரோட்டின்’ -‘விட்டமின்’ குறைவில்லாமல் பார்த்துக்கொள்வதில் ரொம்ப கவனமாக இருப்பார்!
அப்படிப்பட்ட ஹீரோவின் படப்பிடிப்பு சென்னை உட்பட பல இடங்களில் நடந்து பாடல் காட்சிக்காக உடுமலைப் பேட்டை அருகில் உள்ள ஒரு மலைப் பாங்கான இடத்தில் பாடல் காட்சியைப் படமாக்க மொத்த யூனிட்டும் அசெம்பல் ஆகியிருக்கிறார்கள்.பிரமாண்டமாக செட்டெல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணியிருக்கிறார்கள் தயாரிப்பாளரும் ஆர்ட் டைரக்டரும்.
அன்னைக்கு தேதியில் அவர் பிஸியான ஹீரோ.தூங்காமல் காரிலும், ஃபிளைட்டிலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் பறந்து கொண்டிருப்பார்.எல்லாம் ரெடி என்கிற நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்த ஹீரோ,கேர வேனுக்கு வந்ததும் படத்தின் தயாரிப்பு நிர்வாகியை அழைத்து,’செட்-அப் எல்லாம் ரொம்ப சிறப்பா பண்ணிருக்கீங்க..’ என்று பாராட்டிய கையோடு,’இன்னைக்கு எடுக்கப்போற சாங்கை நான் ஒரு தடவை கேட்கணும்.. ரெடி பண்ணுங்க..! என்று சொல்லியிருக்கிறார்.
இப்போது மாதிரி அப்போல்லாம் இவ்வளவு டெக்நாலஜி இல்லாத காலம் அது.ஸோ… ஆடியோ கேசட்டை கொடுத்து கேட்கச் சொல்லிவிட்டு தயாரிப்பு நிர்வாகி படப்பிடிப்பு வேலைகளைப் பார்க்க வந்து விட்டார்.
பெரும் பொருட் செலவில் போடப்பட்ட செட்… நடிக்க மறுத்த ஹீரோ… டைரக்டர் செய்த சாதுரியமான செயல்.!?
கொஞ்ச நேரத்தில் ஹீரோவின் உதவியாளர் வந்து ‘சார் ரொம்ப கோவமா இருக்கார்…உங்களை உடனே வரச் சொன்னார்’ என்று சொல்ல தயாரிப்பு நிர்வாகிக்கு பதட்டம் கூடிவிட்டது.தயக்கத்தோடு ஹீரோவைப் போய் பார்த்திருக்கிறார்.’என்னங்க சாங் இது… என்னோட ரேஞ்சு தெரியாம இப்படிப் போட்டு வச்சிருக்கீங்க…வேற சாங் போடச் சொல்லுங்க… இன்னைக்கு ஷூட்டிங் பேக்-அப் ‘ என்று சொல்லியிருக்கிறார்.தயாரிப்பு நிர்வாகிக்கு அந்த ‘ஜில்’ க்ளைமேட்டிலும் ‘குப்’பென்று வேர்த்து விட்டது.
பெரிய ஹீரோ என்பதால் தாராளமா செலவு பண்ணி செட்டுப் போட்டாச்சு… ஏகப்பட்ட டான்ஸர்ஸ்… துணை நடிகர்கள் என தயாரிப்பாளர் பணத்தை வாரி இறைச்சிருக்கார்… இந்த நேரத்தில் பேக்-அப் பண்ணினால் பெரிய அளவில் பட்ஜெட் எகிறிடுமே என்று யோசித்த தயாரிப்பு நிர்வாகி இயக்குனரைத் தனியாக கூப்பிட்டு நிலமையைச் சொல்லியிருக்கிறார்.
அந்தப் பட இயக்குனருக்கு அது முதல் படம் என்றாலும்.தயாரிப்பு நிர்வாகி சொன்ன தகவலைக் கேட்டுவிட்டு எந்த டென்ஷனும் ஆகாமல் ‘அண்ணே, ஷூட்டிங் அது பாட்டுக்கு நடக்கும்… ஹீரோல்லாம் வருவாரு… நீங்க வேலையைப் பாருங்க..’ என்று கூலாகச் சொல்லிவிட்டு, மாஸ்டரோடு உட்கார்ந்து சாங் எடுப்பதற்கான ‘ஷாட்’ பிரிக்க ஆரம்பித்திருக்கிறார். தயாரிப்பு நிர்வாகிக்கு குழப்பத்தில் கூடுதலாக வேர்த்துவிட்டது!
பெரும் பொருட் செலவில் போடப்பட்ட செட்… நடிக்க மறுத்த ஹீரோ… டைரக்டர் செய்த சாதுரியமான செயல்.!?
கொஞ்ச நேரத்தில் ஹீரோவிடமிருந்து இயக்குனருக்கு அழைப்பு வந்திருக்கிறது. நடந்த குழப்பம் தெரியாமல் மொத்த யூனிட்டும் பரபரப்பாக இருக்க… இயக்குனர் ஹீரோ இருந்த கேர வேனுக்குள் போகிறார்.ஹீரோவின் பிடிவாதம் தெரிந்த தயாரிப்பு நிர்வாகிக்கு மட்டும் பதட்டம் தீரவில்லை.! கேரவேன் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்…
பத்து நிமிடத்தில் ஹீரோவும் இயக்குனரும் சிரித்தபடியே கேரவேனை விட்டு இறங்கி வந்திருக்கிறார்கள். படப்பிடிப்பும் தடங்கல் இல்லாமல் நடந்திருக்கிறது ! நைட் டின்னருக்காக ப்ரேக் விட்டதும்,இயக்குனரிடம் வந்த தயாரிப்பு நிர்வாகி அறிமுக இயக்குனரை தனியாக அழைத்துப் போய்..’சார்… என்ன நடந்திச்சு…எனக்கு ஒண்ணுமே புரியல..!? ‘ என்று ஆச்சர்யமாகக் கேட்டிருக்கிறார். இயக்குனர் சொன்ன தகவல் என்ன தெரியுமா.!?
பெரும் பொருட் செலவில் போடப்பட்ட செட்… நடிக்க மறுத்த ஹீரோ… டைரக்டர் செய்த சாதுரியமான செயல்.!?
இந்த ஹீரோவுக்கு கதை சொல்லி ஓக்கே பண்ணின பிறகும்,தனது குருநாதர் சூப்பர் ஸ்டாரை வைத்து ஹிட் கொடுத்த படத்தில் ஒர்க் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது சூப்பர் ஸ்டாருக்கு போட்ட ஒரு ஹிட் சாங்கோட ட்யூன் இது.உங்களுக்கு நான் கதை சொல்லி ஓக்கே பண்ணின தகவலைச் சொல்லி நான் கொண்டு வந்தேன் சார்.இதுக்கு அப்பறம் போட்ட ட்யூன் தான் அந்த ஹிட் படத்தோட சாங்.
இதை அறிமுக இயக்குனர் சொன்னதும், இயக்குனர் விக்ரமன் படத்தில் ஒரே சாங்கில் ஹீரோ ஜெயிக்கிற மாதிரி,ஒரே பாட்டில் சூப்பர் ஸ்டார் ஆகிடலாம் என்ற நம்பிக்கையில் தான் அந்த ஹீரோ அன்னைக்கு ஸ்பாட்டுக்கு வந்தியிருக்கிறார்.
இந்தத் தகவலைச் சொன்ன அசோஸியேட் இயக்குனர் அண்ணன் சொன்ன கடைசி தகவல்தான் இன்னும் ஹை லைட்… சூப்பர் ஸ்டார் படத்தின் சாங் கம்போசிங் அப்போ பண்ணின சாங்குக்கும் இந்த சாங்குக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை..! நேரம் இருந்தால் முதல் பாராவை இன்னொரு முறை ஸ்க்ரோல் பண்ணிப் படிக்கவும்.

Share this story