லியோனார்டோ டிகாப்ரியோ சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய படம் !

லியோனார்டோ டிகாப்ரியோ சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய படம் !

லியோனார்டோ டிகாப்ரியோ மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர். டைட்டானிக் ஹீரோ என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். இவர் இன்செப்சன், தி ரெவனன்ட், தி வுல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட், ஒன்ஸ் அப்பான் ஹாலிவுட், ஜே. எட்கர் மற்றும் பல உலகளாவிய வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். இவர் நடித்த ஜே. எட்கர் என்ற படம் அமெரிக்க வரலாற்றில் செல்வாக்கு மிக்கவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மிகமுக்கியமான படமாகும்.
லியோனார்டோ டிகாப்ரியோ சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய படம் !
லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த ஜே. எட்கர் படத்தை கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆர்மி ஹேமர் மற்றும் நவோமி வாட்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் முதல் இயக்குநரான ஜே. எட்கர் ஹூவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த திரைப்படம் ஜே. எட்கரின் வாழ்க்கையில் அறியப்படாத தகவல்களையும், அவர் F.B.I இன் வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஒரு குழுவை எப்படி உருவாக்கினார் மற்றும் நீண்ட காலமாக இயக்குநராக பணியாற்றியதையும் குறித்து விவரிக்கிறது. இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

Share this story