ஆணவக் கொலையை படமாக எடுக்க இருந்த பிரபல இயக்குனர் மீது வழக்கு பதிவு!

ஆணவக் கொலையை படமாக எடுக்க இருந்த பிரபல இயக்குனர் மீது வழக்கு பதிவு!

கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் ‘மர்டர்’ என்றொரு படம் எடுக்கப்போவதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவித்திருந்தார். இதையடுத்து. ‘மர்டர்’  படம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி ராம் கோபால் வர்மா மீது தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாலசாமி என்பவர் படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த்திருந்தார். மேலும் தனது மகன் பிராணய் மற்றும் அவரது மருமகள் அம்ருதாவின் புகைப்படங்கள் தங்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
 
ஆணவக் கொலையை படமாக எடுக்க இருந்த பிரபல இயக்குனர் மீது வழக்கு பதிவு!
பிரணய் (24)  என்ற தலித் பிரிவைச் சேர்ந்த இளைஞர், உயர்வகுப்பைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பிரணாய், மனைவி அம்ருதா மற்றும் தாயுடன் சேர்ந்து செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இந்த வழக்கில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பிரணாயை கொள்ள கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் ராவ். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் வைத்து ராவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாருதி ராவ் மற்றும் அவரது மகளின் கதையை அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக கடந்த மாதம் ராம் கோபால் வர்மா அறிவித்திருந்தார்.


“தந்தையர் தினத்தை முன்னிட்டு, அம்ருதா மற்றும் அவரது அன்பான தந்தை மாருதி ராவ் ஆகியோரின் சோகமான கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்க இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறேன்” என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.
அம்ருதா இப்போதும் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். வர்மாவின் இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்த அம்ருதா இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்போவதாகக் கூறினார்.

Share this story