அரசியல் படங்களின் தீர்க்கதரிசி … நக்கல் நாயகன் மணிவண்ணன் பற்றிய சிறப்புப் பதிவு !

அரசியல் படங்களின் தீர்க்கதரிசி … நக்கல் நாயகன் மணிவண்ணன் பற்றிய சிறப்புப் பதிவு !

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், இயக்குனர் மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் அவர்!
மணிவண்ணன் அவர்கள் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவருடைய இயற்பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
இயக்குனர் மணிவண்ணனின் தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர், அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை.

அரசு உயர்நிலை பள்ளியில் மேல்நிலைக்கல்வி முடித்த பிறகு அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ரங்கராஜ் என்ற நடிகர் சத்யராஜ் அறிமுகமானார். அங்கே சத்யராஜின் தவறான வழிநடத்தலால் இளங்கலை வரலாறு சிறப்பு ஆங்கிலப் பாடத்தை தேர்ந்தெடுத்தார். அந்த படிப்பில் உள்ள பாடங்களை கற்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக ஷேக்ஸ்பியர் போன்ற பாடங்கள் மீது வெறுப்புற்று ஒரு கட்டத்தில் படிப்பை இடை நிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதேசமயம் கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அந்த சமயத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ஏற்பட்ட தாக்கத்தினால் படத்தின் இயக்குனர் திரு பாரதிராஜாவுக்கு நூறு பக்க கடிதம் எழுதினார்.கடிதத்தை படித்த பாரதிராஜா
இவரை சென்னைக்கு வரவழைத்து தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார். 1979 ல் இயக்குனர் பாரதிராஜா விடம் சேர்ந்த இவர் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் உதயவியாளராகவும் கூடவே ஒரு சிறிய வேடத்திலும் நடித்தார்.
எனக்கு முதல் பட வாய்ப்பு வாங்கித் ...
அவரை தமிழ் திரையுலகின் ரசிகர்கள் அறிவதற்கு முன்பாகவே அவரின் கதைகளும் வசனங்களும் அனைவருக்கும் பரிச்சயம். அந்தத்திரைப்படத்தை முதன்முதலாகப் பார்க்கும்போது, அது அவருடைய கதை என்பதோ அவர்தான் வசனம் எழுதினார் என்பதோ தெரிந்திருக்காது.  பின்னாளில் அவர் புகழ் பெற்ற போது அவரை பற்றி தெரிந்த போது தான் இவர் தானா அந்த படைப்பாளி வசனங்களுக்கு சொந்த காரர் என்று பலரும் வியந்து பார்த்து பாராட்டினர்.
பாரதிராஜாவுக்குக் கிடைத்த முதல் சிஷ்யன் பாக்யராஜ். அடுத்ததாகக் கிடைத்தவர் மணிவண்ணன். ‘
கல்லுக்குள் ஈரம் படத்தை தொடர்ந்து குருநாதர் பாரதிராஜாவுக்கு ‘நிழல்கள்’ படத்தின் கதையை எழுதிக் கொடுத்தார். ஆனால் படம் சரியாக வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் அடுத்த வாய்ப்பை வழங்கினார் பாரதிராஜா. இந்த முறை மணிவண்ணன் கதையும் வசனமும் கொண்டாடப்பட்டது. திரையிட்ட இடமெல்லாம் 200 நாட்களைக் கடந்து ஓடியது. அந்தப் படம்..அலைகள் ஓய்வதில்லை’. பாரதிராஜாவின் ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர் நீண்ட அனுபவத்தை பெற்ற பிறகு பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளியே வந்தார்.
Acclaimed actor-director Manivannan expires at 58 - Desimartini
‘’இந்தப் பையன் திறமைக்காரனா இருக்கான். நல்லாப் படம் பண்ணுவான்னு நம்பிக்கை இருக்கு. ஒரு சான்ஸ் கொடுங்க’’ என்று கதாசிரியரும் தயாரிப்பளாருமான கலைமணியிடம் மணிவண்ணனுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. வாய்ப்பும் வழங்கப்பட்டது. படம் “கோபுரங்கள் சாய்வதில்லை’. கலைமணியிடம் மணிவண்ணனுக்கு சிபாரிசு செய்தவர் இசைஞானி இளையராஜா.
‘கோபுரங்கள் சாய்வதில்லை’ அறுக்காணி சுஹாசினி மறக்கமுடியுமா? மோகனும் நடிப்பில் பிரமாதப் படுத்தியிருந்தார். அதே மோகனை வைத்து, வேறொரு கதைக்களத்தில் ‘இளமைக்காலங்கள்’ என்றொரு துள்ளத்துடிக்கிற காதல் கதையை எடுத்தார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஈரமானே ரோஜாவே’ பாடல்தான் அன்றைய காதலர்களின் தேசிய கீதம். தொடர்ந்து முற்றிலும் வேறொரு கதைக்களத்தில் மோகன், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோரைக் கொண்டு,  ‘நூறாவது நாள்’என்று க்ரைம் திரில்லர் கொடுத்தார். இந்த படம் பெற்ற
மாபெரும் வெற்றி,  இயக்குனர் மணிவண்ணனை தமிழ் திரையுலகின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. இருநூறு நாட்களைக் கடந்து ஓடியது. மோகன், நளினி, விஜயகாந்த், சில காட்சிகளில் வரும் மொட்டை சத்யராஜ், அந்த சிகப்புக் கலர் கோட்டு, கண்ணாடி, சர்ச்…, குதிரைப் படம் போட்ட அட்டைப்பட வாரப் பத்திரிகை என படத்தில் மிரட்டியிருந்தார் இயக்குனர் மணிவண்ணன்.
 
அரசியல் படங்களின் தீர்க்கதரிசி … நக்கல் நாயகன் மணிவண்ணன் பற்றிய சிறப்புப் பதிவு !
ஒரு பக்கம் ‘24 மணி நேரம்’, ‘விடிஞ்சா கல்யாணம்’ என்று திரில்லர் படங்களாகவும்
மறுபக்கம் ‘இங்கேயும் ஒரு கங்கை’, ‘சின்னதம்பி பெரியதம்பி’ என்று காதல் படங்களாகவும்
அடுத்து கலைஞரின் கதை வசனத்தில் ‘பாலைவன ரோஜாக்கள்’  என்று சமூக சீர்திருத்த படம் என்று பல்வேறு தளங்களில் கதைக்களங்களில் இயங்கினார்.  தன் நண்பர் சத்யராஜை தொடர்ந்து பயன்படுத்தினார். சத்யராஜுக்கென ஒரு தனியான சிறப்பான உடல்மொழி வசன உச்சரிப்பு பாணியை உருவாக்கினார். அந்த நக்கல், நையாண்டி, கிண்டல் கலந்த நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள்.
அடுத்தடுத்த வருடங்களெல்லாம் மணிவண்ணனுக்கு ஓய்வில்லாத வருடங்கள். கதையை யோசிப்பார். திரைக்கதையாக வளர்ப்பார். நடிகர்களைக் கூப்பிட்டுக்கொண்டு படப்பிடிப்புக்குப் போவார். படப்பிடிப்புத் தளத்தில், படப்பிடிப்பிற்கான காட்சியை படமாக்குவதற்கு முன்னதாக, பரபரவென எழுதுவார்.  அனைத்தும் அந்தக் காட்சிக்கான வசனங்கள். படப்பிடிப்பு தளத்தில்
படமாக்குவதற்கு முன்னதாக அதற்கான காட்சிகளுக்கு வசனம் எழுதுவதுதான் இயக்குனர் மணிவண்ணனின் பாணி. நிறைய படங்கள். நிற்கவும் உட்காரவும் நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தார்.
 
சத்யராஜ் எனும் வைரம். மணிவண்ணன் கையில் கிடைத்ததால் இன்னும் பட்டை தீட்டப்பட்டது. ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறியேம்மா’ என்று சத்யராஜின் மாடுலேஷன் டயலாக் (24 மணி நேரம்) மிகப் பிரபலம் அடைந்தது. அது மணிவண்ணன் பாணி என்பதெல்லாம் பின்னாளில், மணிவண்ணன் நடிக்க வந்தபோதுதான் தெரிந்தது. நக்கல், நையாண்டி என கலவையாய் வந்து நின்ற சத்யராஜீடன் கவுண்டமணியையும் இணைத்து அந்த இணையை புகழ்பெற்ற இணையராக்கியதில் மணிவண்ணனுக்குப் பெரிய பங்கு உண்டு.
தொடர்ந்து, ‘ஜோதி’ (1983),
‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983)
, ‘இளமைக் காலங்கள்’ (1983), ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984)
, ‘ஜனவரி ஒன்னு’ (1984),
‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984), ‘இருபத்தி நாலு மணிநேரம்’
(1984), ‘நூறாவது நாள்’ (1984),
‘அன்பின் முகவரி’ (1985)
, ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986), ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986),
‘முதல் வசந்தம்’ (1986),
‘இனி ஒரு சுதந்திரம்’ (1987),
‘தீர்த்தக் கரையினிலே’ (1987),
‘புயல் படும் பாட்டு’ (1987),
‘கல்யாணக் கச்சேரி’ (1987), ‘ஜல்லிக்கட்டு’ (1987),
‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988), ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988), ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘சந்தனக்காற்று’ (1990),
‘புது மனிதன்’ (1991),
‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992), ‘மூன்றாவது கண்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வீரப்பதக்கம்’ (1994),
‘ராசாமகன்’ (1994), ‘தோழர் பாண்டியன்’ (1994),
‘கங்கை கரை பாட்டு’ (1995)
,‘ஆண்டான் அடிமை’ (2001), ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
தன் குரு பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமாஇயக்குனர் மணிவண்ணன். பிறகு, சிஷ்யன் சுந்தர் சியின் இயக்கத்தில்
குணச்சித்திரம் கலந்த வில்லன் ப்ளஸ் நகைச்சுவை நட்சத்திரமாக நமக்குக் கிடைத்தார்.
வில்லன் கதாபாத்திரம் நடிக்க மணிவண்ணன், நகைச்சுவை பாத்திரம் நடிக்க மணிவண்ணன்.  இயக்குனர் அகத்தியன் படங்களில் இண்டலெக்ச்சுவல் கதாபாத்திரத்தில் நடிக்க மணிவண்ணன்.
என்று பல்வேறு வேடங்களில் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கினார்.
அவரின் நடிப்பைப் பார்க்கும்போதுதான், சத்யராஜின் நக்கல் நையாண்டி வசன உச்சரிப்பு எல்லாம் இயக்குனர் மணிவண்ணனிடம் இருந்து வந்தது என்பது தெரிய வந்தது நமக்கு!
பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜா, மணிவண்ணனா என்று கார்ட்டூன் வடிவில் போஸ்டர் அடித்து, தன் முதல்படத்துக்கு விளம்பரமாக்கியதில் இருந்தே தொடங்கிவிட்டது மணிவண்ணன் குறும்பும் குசும்பும்!
பாரதிராஜாவின் சிஷ்யர்தான் மணிவண்ணன். ஆனாலும் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு, மிக சிறப்பாக இயங்கினார். எந்தக் கதையாக இருந்தாலும் அதைச் சிறப்புற மக்களுக்குப் படையலிட்டதுதான் மணிவண்ணன் பாணி.  இயக்குனர் மணிவண்ணனின் சிறப்பு என்பதே. அவரின் டைமிங், ரைமிங் வசனங்கள் தான்.  கோவை பாஷை, ஸ்லாங் எப்படி இருக்கும் என்பதை, கோயம்புத்தூரே போகாதவர்கள் கூட, மணிவண்ணன் படங்களைப் பார்த்துதான் தெரிந்துகொண்டார்கள்அண்ணா என்பதை கோவை பாஷையில். ’ண்ணா’ போட்டுப் பேசும் வழக்கத்தையும் ரசிகர்களுக்கு இவரே ஏற்படுத்திக் கொடுத்தார்.
அரசியல் படங்களின் தீர்க்கதரிசி … நக்கல் நாயகன் மணிவண்ணன் பற்றிய சிறப்புப் பதிவு !
மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி என்றாலே அங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் அசையாத இடம் பிடித்தது இந்த மூவர் கூட்டணி. அங்கே சத்யராஜ், கவுண்டமணி என எல்லாருக்குள்ளும் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தார் இயக்குநர் மணிவண்ணன்.
வில்லன், நகைச்சுவை கலந்த வில்லன், நகைச்சுவை கதாப்பாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என்று  அனைவரிடமும் ஜோடி போட்டு நடித்தார். யாருடன் நடித்தாலும் ஜோடிப்பொருத்தம் அருமை எனும் அளவுக்கு மணிவண்ணன் முத்திரை பதித்தார். கமலுடன் ‘அவ்வை சண்முகி’யில் இவர் செய்த முதலியார் ரோல், தனி ரகம்.
தமிழ் சினிமாவில்,  நடிப்பு வேந்தர் ரங்காராவை நினைத்து நடிக வேள் எம்.ஆர்.ராதா வை நினைத்து நகைச்சுவை வேந்தன் பாலையாவை நினைத்து ஏன் ரகுவரனை நினைத்து கதாபாத்திரங்களை கதை எழுதும் போதே சிந்தித்தது போல மணிவண்ணனையும் நினைத்து கதை செய்யும் அளவுக்கு உயர்ந்தார். எந்த கதாபாத்திரம் என்றாலும்அநாயாசமாக நடித்து அசத்திவிடுவார்.
அரசியல் படங்களின் தீர்க்கதரிசி … நக்கல் நாயகன் மணிவண்ணன் பற்றிய சிறப்புப் பதிவு !
பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமான
மணிவண்ணன்,அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில்அவர் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் தொடர்ந்து இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, படங்கள் தொடர்ந்து
‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன்,
சத்யராஜ், விஜயகாந்த்,கார்த்திக், பிரபு,விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.
Manivannan Birth Anniversary: 21 times the multifaceted film ...
மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் திமுகவில் இருந்த மணிவண்ணன் அவர்கள்,  வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) துவங்கிய போது அந்த கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் கடைசி காலம் வரை இருந்தார்.
தமிழ் ஈழம் பெறவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.
இயக்குனராகத் தனது 50 திரைப்படங்களை இயக்கிய, மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடி மரியாதை செய்யப்பட்டது.
@shivakumarTD

Share this story