டெனெட் ரிலீஸ் தேதியை அறிவித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்!

டெனெட் ரிலீஸ் தேதியை அறிவித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்!

கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டெனட் படத்தின் ரிலீஸ் தேதியை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘டன்கிர்க்’ படத்திற்கு பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படம் டெனெட். டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், மைக்கல் கெய்ன், டிம்பில் கபாடியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Tenet' Release Date Change: Nolan Film Will Open Overseas Before ...
கிறிஸ்டோபர் நோலன் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மற்ற இயக்குனர்களை போலல்லாமல் அவருடைய கதை நம்மளை பித்து பிடிக்க வைத்து விடும். ஒருமுறை பார்த்தால் படம் புரிந்து விடாது. அந்தளவிற்கு நுட்பமான கதைகளை எடுப்பதில் கைதேர்ந்தவர் கிறிஸ்டோபர் நோலன்.
டெனெட் ரிலீஸ் தேதியை அறிவித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்!
தற்போது அவர் இயக்கியுள்ள டெனெட் படத்திற்கு உலகமெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
டெனெட் ரிலீஸ் தேதியை அறிவித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்!
பின்னர் படம் எப்போது ரிலீஸ் ஆகும்? என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் டெனெட் ஜூலை 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது டெனெட் படம் அமெரிக்காவைத் தவிர்த்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா, கனடா, கொரியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளில் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என்று வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் மற்ற நாடுகளில் வெளியாகி ஒரு வாரம் கழித்து செப்டம்பர் 13 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

Share this story