“சாயாவனம் சாய்ந்துவிட்டதே!”… எழுத்தாளர் கந்தசாமி மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!

“சாயாவனம் சாய்ந்துவிட்டதே!”… எழுத்தாளர் கந்தசாமி மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!

‘சாயாவனம்’ என்னும் புதினத்தின் மூலம் தமிழ் எழுத்துலகில் பிரபலமானவர் எழுத்தாளர் சா கந்தசாமி. இவர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர். 1908ஆம் ஆண்டு ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். தென்னிந்திய சுடு மண்(terracotta) கலங்கள் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார்.
சா. கந்தசாமி - தமிழ் விக்கிப்பீடியா
இதயக்கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு தமிழகத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
“சாயாவனம் சாய்ந்துவிட்டதே!”… எழுத்தாளர் கந்தசாமி மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
கவிஞர் வைரமுத்துவும் கந்தசாமி அவர்களின் மறைவு குறித்து பதிவிட்டுள்ளார் அதில் “மறைந்தாரே சா.கந்தசாமி!
‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!
தன்மானம் – தன்முனைப்பு
தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!
சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story