ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் ஜாம்பவான் இயக்குனர் 'விசு' பிறந்தநாள் சிறப்பு பதிவு !

ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் ஜாம்பவான் இயக்குனர் 'விசு' பிறந்தநாள் சிறப்பு பதிவு !

மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்ற மறைந்த நடிகர் இயக்குநர் விசு
பிறந்தநாள் இன்று. 1945 ஜீலை 1 ல் பிறந்தவர்.
இயக்குனர் பாலசந்தர் மூலமாக உதவி இயக்குனராக திரையுலகில் அறிமுகமான இயக்குனர் விசு, ஆரம்பத்தில் மேடை நாடகங்களை இயக்கி அதில் நடித்து வந்தார். இவர் மேடை நாடகங்கள் நடத்திய போது  ஒய்ஜி மகேந்திரன், எஸ் வி சேகர், மௌலி, போன்றோருடன் செயல்பட்டு வந்தார்.
ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் ஜாம்பவான் இயக்குனர் 'விசு' பிறந்தநாள் சிறப்பு பதிவு !
இவர் கதை வசனம் எழுதி மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் நடிகர் ரஜினிகாந்த் நடித்த
நெற்றிக்கண், தில்லு முல்லு, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத் போன்ற படங்களாகும்.
நெற்றிக்கண் திரைப்படத்தில் இவர் எழுதிய வசனங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தந்தை, மகன் ரஜினிகாந்த் இருவருக்கும் எழுதிய வசனங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது.
கதை வசனம் எழுதிய படங்களில் முக்கியமான படங்களாக புதுக்கவிதை, புயல் கடந்த பூமி,
மழலைப் பட்டாளம், அவன் அவள் அது, கீழ் வானம் சிவக்கும், சிம்லா ஸ்பெஷல், போன்ற படங்களாகும். விசு அவர்கள் திரையுலகில் நடிகராக அறிமுகமான படம் குடும்பம் ஒரு கதம்பம். ஒரு நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த படத்தின் கதை வசனத்தை இவரே எழுதியுள்ளார். இயக்கம் இயக்குனர் எஸ்பி.முத்துராமன்.
ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் ஜாம்பவான் இயக்குனர் 'விசு' பிறந்தநாள் சிறப்பு பதிவு !
இவருடைய புகழுக்கு காரணம் மிகவும் கூர்மையான அதேசமயம் நகைச்சுவை ததும்பும் வசனங்கள். அதில் சமூக கண்ணோட்டங்களையும், பிரச்சினைகளையும் அலசி இருப்பார். இவருடைய படங்களில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து சம வாய்ப்பு வழங்கி அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்திருப்பார். பல சிறந்த படங்களை இயக்கி. இருந்தாலும்  இவர் எழுதி இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம் படம்’
வெள்ளி விழா கண்டு மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி தமிழின் மிகச் சிறந்த படத்திற்காக
முதன் முதலில் மத்திய அரசின் தங்க மயில் விருது பெற்ற திரைப்படமாகும் மற்றும் பிலிம் பேர், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் வென்றது. மேலும் பல்வேறு மொழிகளில் தயாரித்து
வெற்றி பெற்றது. இந்த படம் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த மாபெரும் ஜனரஞ்சக திரைப்படம்.
ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் ஜாம்பவான் இயக்குனர் 'விசு' பிறந்தநாள் சிறப்பு பதிவு !
தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க 1992 ல் இவர் இயக்கிய நீங்க நல்லா இருக்கணும் என்ற திரைப்படமும் சிறந்த படத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதை வென்றது. இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் நடித்த கடைசி திரைப்படமாகும்.
கதை வசனம் எழுதி நடித்து கொண்டிருந்த நடிகர் விசு கண்மணி பூங்கா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து  மணல் கயிறு,  டௌரி கல்யாணம், அவள் சுமங்கலி தான் சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம், கெட்டி மேளம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வரவு நல்ல உறவு, மீண்டும் சாவித்திரி, போன்ற பல வெற்றி படங்களை இயக்கி நடித்தார். பெரும்பாலும் இவருடைய படங்கள் சமுதாய, நடுத்தர வர்க்கப் பிரச்சினைகளான வரதட்சணை கொடுமை, கைம்பெண் மறுமணம், கூட்டு குடும்பம் – தனிக்குடித்தனம் வாழ்க்கை,  அதில் நிலவும் பிரச்சினைகள், மாமியார் மருமகள் உறவு, வேலையில்லா திண்டாட்டம், என்று எளிய மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி இருக்கும்.
ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் ஜாம்பவான் இயக்குனர் 'விசு' பிறந்தநாள் சிறப்பு பதிவு !
இவருடைய குருநாதர் கே பாலச்சந்தர் படங்களை போலவே குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார்.இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவரே மையக் கதாபாத்திரமாக நடித்தது சிறப்பு.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியிலும்  ‘அரட்டை அரங்க’ம் விசுவின் மக்கள் அரங்கம் போன்ற சமூக விவாத நிகழ்ச்சிகளை பல முண்ணணி தொலைக்காட்சிகளில் நடத்தினார். இந்த விவாத நிகழ்ச்சிகள் மூலம் விளம்பரதாரர்கள் உதவியுடன் பல்வேறு எளிய குடும்பங்களின் கஷ்டங்களை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பெற்றுத் தந்தார்.
கடைசியாக நடித்த படம் மணல் கயிறு 2 இவரே நடித்த படத்தின் இரண்டாம் பாகம்
இந்த திரைப்படம். இயக்குனர் விசு அவர்கள் மனைவி திருமதி சுந்தரி! இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இயக்குனர் விசு விடம் உதவியாளர்களாக இருந்த கஸ்தூரி ராஜா, டிபி கஜேந்திரன் இருவரும் புகழ்பெற்ற இயக்குனர்கள்.
இயக்குனர் விசு மார்ச்22 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.
-@shivakumar TD

Share this story